'கொங்கு நாடு ' என்பது, கொங்கு நாட்டு வரலாறு குறிக்கும் ஆகு பெயர்ச் சொல். இந்நூல் கொங்கு நாட்டுப் பொது பகுதி, தமிழக வரலாறு, கொங்கு நாட்டு வரலாறு என்னும் மூன்று பகுதியையுடையது. கொங்கு நாட்டு வரலாறு எழுதுவதற்குப் பெருந்துணையாக இருந்தது. கோவைக் கிழார் அவர்களின் 'கொங்கு நாட்டு வரலாறு' என்னும் நூலாகும். அரும்பாடுபட்டு முதற்பெரு முயற்சியாக அந்நூலை ஆக்கியுதவிய அன்னார்க்கு கொங்கு நாட்டு மக்கள் பெரிதும் கடமைப்பட்டவராவர். கொங்கு நாட்டுப் பொதுப் பகுதியில் கொங்கு நாடு பற்றிய முழுவரலாறும் விளக்கமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது.