தேச பக்தரும், சிந்தனையாளரும் - பிரபல தமிழ் எழுத்தாளருமான கல்கியின் படைப்புகளில் ஒன்று 'கள்வனின் காதலி'.
வசதியான குடும்பத்தில் பிறந்த கல்யாணியும், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த முத்தையனும் ஒருவரை ஒரவர் ஆழமாக்க் காதலிக்கின்றனர். சமூக அந்தஸ்தில் உள்ள வித்தியாசம் காரணமாகவும், தனது அன்பு தங்கைக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டியக் கட்டாயம் இருந்ததாலும் முத்தையன் கல்யாணியைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
கிராம சூழ்நிலையையும், இயற்கைக் காட்சிகளையும் கல்கி நன்கு வருணிக்கிறார்.
எந்தச் சூழ்நிலையிலும் காதலிப்பவர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் உறுதியாக நம்ப வேண்டுமென்று கதை சொல்கிறது.