எல்லோராலும் எல்லா விரதங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாவிடினும், ஏற்றுக் கொண்டு பின்பற்றும் விரதங்களை எப்படிச் செயலாற்ற வேண்டும், அதனால் ஏற்படும் தெய்வ நன்மைகள் என்ன என்பதையெல்லாம் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாறாக, குருட்டாம் போக்கில் பின்பற்றக் கூடாது. விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்தாலும், அஞ்ஞான முறைப்படி ஆராய்ந்தாலும், அருள் ஞான முறைப்படி ஆராய்ந்தாலும், விரதங்கள் நமக்கு ஒருபோதும் விரோதமான நிலைகளைத் தரவில்லை என்பது மட்டும் உறுதி!