சித்தர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர் போக முனிவர். இவருடைய பிரதம சீடர்தான் புலிப்பாணி முனிவர். இவர் ஜோதிடம். போகர் மருத்துவம் மாந்திரிகம் ஆகிய மூன்று கலைகளிலும் கெட்டிக்காரராக திகழ்ந்தார் என்பதற்கு அவர் எழுதிய பாடல்களே சான்றாகும். இந்நூலில் புலிப்பாணி முனிவரின் ஜாதக விளக்கங்கள் செய்யுள் நடையில் உள்ளன. அவற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய உரைநடையில் எழுதியுள்ளேன். புலிப்பாணி முனிவரின் ஜாதக இரகசியங்கள் இதுவரை முழுமையான நூலாக வெளியிடப்பட்டதில்லை. இவரது கருத்துக்கள் அங்குமிங்கும் பாடல்களாக சிதறிக் கிடக்கின்றன. இவையெல்லாம் திரட்டப்பட்டு கிட்டத்தட்ட ஒரு முழுமையான நூலாக இங்கு தரப்பட்டுள்ளது.