குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்
Kumari Kandama Sumeriama?
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. பிரபாகரன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184937909
Add to Cart"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தமிழர்களின் தாய்நாடு எது?
தமிழர்களின் தோற்றத்தை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தேடிச் செல்லும் இந்நூல், இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களை மீள்வாசிப்பு செய்து ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது. தனது தேடலின் ஒரு பகுதியாக பண்டைய சுமேரிய வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நூலாசிரியர் பா. பிரபாகரன், தமிழர் நாகரிகத்துக்கும் சுமேரிய நாகரிகத்துக்கும் இடையிலான சில பிரமிக்கத்தக்க ஒற்றுமைகளைக் கண்டடைகிறார். அதன் அடிப்படையில் உருவாகும் அவருடைய கோட்பாடு சில புதிய சாத்தியங்களை நம் முன் வைக்கிறது.
சிந்துசமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், தமிழ்சம்ஸ்கிருதத் தொடர்பு, ஆரியரின் வருகை, சங்க இலக்கியம் என்று பரந்து விரிந்து செல்லும் இந்தப் புத்தகம் பலருடைய ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
தமிழர்களின் தொன்மம், தோற்றம், பரவல் ஆகியவற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படவிருக்கும் இந்நூல், சில முக்கிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது."