என்னுயிரே
Ennuyirae
₹135₹150 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதவல்லி கல்யாணசுந்தரம்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2010
Add to Cartகற்பூர ஆரத்தி முடித்து வந்தவர், அவனிடம் சர்க்கரைப் பொங்கல் இருந்த கிண்ணத்தைக் கொடுத்து விட்டு, "என்ன ஸ்ரீ, பூஜை முடிப்பது வரை கூடப் பொறுமை இல்லாமல் அவசரம்?" என்று விசாரித்தார். பதிலேதும் சொல்லாமல் மகன் முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து, சிரிப்போடு, "ஐ ஆம் சாரி மிஸ்டர் ஸ்ரீநிவாசன். பழக்க தோஷம். இருபத்தாறு வருஷமா கூப்பிட்டுகிட்டே இருக்கிறேன். இனிமேல் பார்த்து நடந்து கொள்கிறேன்," என்று பவ்யமாய்க் கேட்டார். 'நானும் பதினஞ்சு வருஷமா சொல்லிக்கிட்டே இருக்கிறேன், என்னை 'ஸ்ரீ' என்று கூப்பிடாதீங்க. பொண்ணு பேர் மாதிரி இருக்கு. நிவாஸ் என்று சொல்லுங்க, வாசு என்று சொல்லுங்க, வாசன் என்று சொல்லுங்க என்று எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு இந்த ஸ்ரீ மட்டும் விடவே மனசு வராது இல்லை?” என்று கோபத்தோடு கேட்டான். "எனக்குப் பையன் பொண்ணு எல்லாம் நீதான். சரி விடு, இனிமேல் நான் அந்தப் பேர் சொல்லி உன்னைக் கூப்பிட்டால் என் பேரை மாற்றிக் கொள்கிறேன்," என்று பூங்கோதை சவால் விட்டதும், "ம்கூம், ஏற்கெனவே இருபதாயிரத்து முன்னூற்றுப் பதினேழு முறை சவால் விட்டுத் தோற்றாகிவிட்டது. அந்த எண்ணிக்கையில் ஒண்ணு கூடப் போகிறது," என்று சலித்துக் கொண்டான் ஸ்ரீநிவாஸ். “சரிடா. அதை விடு, காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு சீக்கிரம் சீக்கிரம் என்று அலறினாயே! என்ன விஷயம்?" என்று கேட்டார்.