
இனி எல்லாம் சுகமே...
Ini Ellaam Sugame…
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762600
குறிச்சொற்கள் :வழிகாட்டி, தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of StockAdd to Alert List
‘வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்; அது வெற்றிக்கான விலை. சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்; அது ஆக்கபூர்வமான ரகசியம். விளையாட நேரம் ஒதுக்குங்கள்; அது இளமைக்கான ரகசியம். படிக்க நேரம் ஒதுக்குங்கள்; அது அறிவுக்கான ஊற்று. நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்; அது மகிழ்ச்சிக்கான பாதை. நேசிக்க நேரம் ஒதுக்குங்கள்; அது உற்சாகமான வாழ்க்கை. சிரிக்க நேரம் ஒதுக்குங்கள்; அது ஆத்மாவின் ராகம்’ _ எத்தனை அர்த்தபூர்வமான வரிகள் (யாரோ சொன்னது). வாழ்க்கை இன்பமயமாக ஆகவேண்டும் என்றால், துன்பங்களைத் துறக்க வேண்டும். துன்பங்களைத் துறக்க என்ன செய்ய வேண்டும்? எப்போதும் இன்பமாகவே இருக்க என்ன வழி? வாழ்வைத் துய்த்து வாழ வேண்டுகிறவர்களின் எண்ணற்ற பல கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் விடை தேடுகிறது இந்தப் புத்தகம். வாழ்க்கையை லயித்துக் கொண்டாட பல நல்ல வழிகளை பரிந்துரை செய்கிறது. வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த நண்பனாக இருந்து, தன்னம்பிக்கை ஊட்டுகிறது; வழி சொல்கிறது. நூலாசிரியர் வேங்கடத்தின் எழுத்து நடை, சுவையும் சுவாரஸ்யமும் குன்றாமல் வாசகர்களை அழைத்துச் செல்வது நூலுக்கு அழகு சேர்க்கிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்கவேண்டிய சிறந்த வழிகாட்டி. இனி எல்லோரது வாழ்க்கையும் சுகமாகும்!
