book

தமிழ் சி.இ.ஓ.

Tamil C.E.O.

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகடன் பிரசுரம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788184762587
குறிச்சொற்கள் :அனுபவங்கள், திறமை, வெற்றி, முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ_வாக பணியாற்றும் தமிழர்களின் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் எடுத்துக்கூறும் நூல் இது. ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நேர்காணல்கள், இப்போது நூல் வடிவம் பெறுகிறது. சி.இ.ஓ., என்றால் அசகாய சூரர்கள், அவர்களுக்கெல்லாம் ஏதோ திறமை இருக்கிறது, நமக்கெல்லாம் அது எங்கே இருக்கிறது என்பதே பரவலான எண்ணம். திறமை எல்லோருக்கும் இருக்கிறது, ஆனால் அவர்கள் எப்படி அந்தத் திறமையைக் கூர்தீட்டி வளர்த்துக்கொண்டார்கள் என்பதை, சாதனை படைத்த 23 சி.இ.ஓ._க்களின் அனுபவங்கள் விளக்குகிறது. கிட்டத்தட்ட அத்தனை பேரும், தங்கள் பெற்றோர்கள் சிறுவயதில் தங்களுக்குப் போதித்த அறிவுரைகளையே தலைமைப் பீடத்தில் பிரயோகித்திருக்கிறார்கள் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். ஏதோ ஒரு கணக்கை வைத்துக்கொண்டு தலைமை இடத்தில் இருந்து செயல்பட்டால் வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்கள் விவேகத்தையும் சாதுர்யத்தையும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தியே அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது நிச்சயம். அதேநேரத்தில் கொஞ்சம் தைரியமாக ‘ரிஸ்க்’கும் எடுத்திருக்கிறார்கள். பேட்டி கொடுத்தவர்கள் எவருமே, இந்த விவேகம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கொண்டாடவில்லை. ‘நான் செய்தேன், உங்களாலும் முடியும்!’ என்ற செய்தியைத்தான் கூறியிருக்கிறார்கள்.