
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
Padippil Siranthu Vilanguvathu Eppadi?
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :96
பதிப்பு :5
Published on :2015
ISBN :9789380892603
குறிச்சொற்கள் :வெற்றி, டிப்ஸ், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம், நேர நிர்வாகத்தின் இன்றியமையாமை ஆகிய முக்கிய கூறுகள் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமானால் அவர்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் மனப் பதட்டத்தை தணித்துக்கொள்ள வேண்டும் என்றும், நல்ல உணவு பழக்கங்களை கைக்கொள்ள வேண்டும் என்றும், பாடம் படிப்பது, டி.வினிமா பார்ப்பது, விளையாடுவது போன்றவை மாணவர்களின் சுய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும், தேர்வு பயம் கூடாது என்றும், தேர்வு நேரத்தில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், தேர்வா? விளையாட்டா என்றால் தேர்வுக்கே முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
- பதிப்பகத்தார்.
