
எப்போ வருவாரோ
Eppo Varuvaro
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். கிருஷ்ணசாமி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184761689
குறிச்சொற்கள் :சம்பவங்கள், தகவல்கள், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம்
Out of StockAdd to Alert List
நூலாசிரியர் ஆர். கிருஷ்ணசாமி, ஹரிதாஸ் கிரி சுவாமியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பக்தர்களில் பிரதானமானவர். சுவாமிஜியின் ஆலோசனையின்படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவர். இன்றளவும் வார்த்தைக்கு வார்த்தை 'குருஜி' என்று பக்திப் பெருக்குடன் விளிப்பவர்.
1994-ல் சுவாமி ஹரிதாஸ் கிரி பிரயாகையில் ஜலசமாதி அடைந்துவிட்ட துயரச் செய்தி வந்ததிலிருந்து தொடர்ந்து நடந்த சம்பவங்களை இந்த நூலில் உண்ச்சிப் பெருக்குடன் விவரிக்கிறார் ஆர். கிருஷ்ணசாமி. தென்னங்கூரில் பாண்டுரங்கனுக்குக் கோயில் ஒன்று கட்ட வேண்டும் என்ற குருஜியின் கனவு நனவான அதிசயத்தையும் விளக்கியிருக்கிறார். கோயிலின் நிர்மாணப் பணிகளுக்கு ஹரிதாஸ் கிரி கொடுத்த ஆலோசனைகள் எப்படி செயல் வடிவம் பெற்றன என்பது குறித்தெல்லாம் நூலாசிரியர் கொடுத்திருக்கும் தகவல்களைப் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படுவது நிச்சயம்.
விகடம் பிரசுரம் வெளியிட்டுவரும், ஆன்மிக நூல்கள் வரிசையில் 'எப்போ வருவாரோ?' என்ற இந்த நூலுக்கும் வாசகர்களின் அமோக ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
-ஆசிரியர்
