book

தஸ்தயெவ்ஸ்கி கதைகள்

Dhasthayevski Kathaigal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. சுசீலா
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789382648789
Add to Cart

மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை,- அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலால் துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்கும் கணமும், அதைவிட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை.

தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை, அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே.