book

திருமுடி திருவடி

Thirumudi Thiruvadi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருண் சரண்யா
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683623
குறிச்சொற்கள் :வழிப்பாடு, நம்பிக்கை, தெய்வம், பொக்கிஷம், புராணம், காவியம்
Out of Stock
Add to Alert List

கண்முன் விஸ்வரூப தரிசனம் தருகிறான் இறைவன்!

திருவடி முதல் திருமுடி வரை அங்குலம் அங்குலமாக ரசித்து, மெய்மறந்து கிடக்கிறான் பக்தன்!

பார்த்துப் பார்த்து தீரவில்லை அவனுக்கு!

பொறுமை போய்விடுகிறது பகவானுக்கு.

'என்னப்பா! இன்னுமா என்னை தரிசித்து ஆகவில்லை?' என்கிறார்.

'என்ன செய்வேன் இறைவா! உனது திருவடியைத் தரிசித்ததுமே,மார்கண்டேயனுக்காக நீ எமனை எட்டி உதைத்தது நினைவுக்கு வருகிறது. கல்லான அகலிகையின் சாபவிமோசனம் கண்முன் வந்து நெகிழவைக்கிறது!

திருமுடியைப் பார்த்தாலோ, பகீரதனுக்காக கங்கையைத் தலையில் தாங்கிய தங்களது கருணை - மனத்தைக் கசிய வைக்கிறது!' என்று உருகிப் போகிறான்.

இந்த நூலும் அப்படித்தான்! பிரபஞ்ச நாயகனான இறைவனது திரு அங்கங்கள் ஒவ்வொன்றுக்குமான சிலிர்ப்பூட்டும் கதைகளை - இதிகாச, புராண காவியங்களிலிருந்து சுவைபட எடுத்து அமுதம் போல் ஊட்டிவிடுகிறது. ரசித்துப் பருகுங்கள்.

சூடு பறக்கும் இந்நூலை, நாம் புரட்டத் தொடங்கலாமா?

God appears before our eyes in all His divine stature! The devotee is beside himself, thinking of God's holy head to foot. Still he is not satisfied. He becomes impatient. Even God asks him if he has not finished seeing Him. But the devotee answers, What to do God, as soon as I see your holy feet, I think of your kick to Yama for the sake of Markandeya. The lifting of the curse of Ahalya melts me. When I look at your holy locks, I remember your grace of having borne Ganges in the locks for Bahirada. This book is also like the devotee. It feeds you with stories related to each and every organ of the God's holy body taken from legends and epics, like ambrosia. Drink it with enjoyment. Shall we turn its pages hot?