book

அரிதாரம் கலைந்தவன்

Aridharam Kalainthavan

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜாசின் ஏ.தேவராஜன்
பதிப்பகம் :தங்கமீன் பதிப்பகம்
Publisher :Thangameen Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :183
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

அழுத்தங்களற்ற பழைய வாழ்வின் சுகந்தங்களையும், நகர் சார்ந்த வாழ்வில், 'தான்' சார்ந்து சுழன்று வரும் மனித மனதின் விசித்திரங்களையும் அணுக்கமாகக் கவனித்து வருபவர் மலேசிய எழுத்தாளர் ஜாசின் ஏ.தேவராஜன். தனிமனித வாழ்வை, வெவ்வேறு முகம் காட்டும் சமுதாயத்தை, பலவீன மனித மனநிலைகளை, ஆண்-பெண் உறவின் ஆதாரச் சித்திரங்களை அடையாளப்படுத்தும் பல சிறுகதைகளை இவர் எழுதி இருக்கிறார். அவற்றில் சில மட்டுமே இங்கு தொகுப்பாகி இருக்கின்றன. ஆண்டுகளின் ஓட்டத்தில் வளர்ந்து நவீன வடிவம் கொண்டுவிட்டதோர் மொழி இந்தச் சிறுகதைகளின் ஊடாகக் காணக் கிடைக்கிறது. தனது மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அடையாளங்களைக் காப்பதற்குத் தொடர் போராட்டங்களைச் சந்திக்கும் ஓர் இனத்தின் பிரதிநிதிகள் மலேசிய வெளி முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். ஒரு நகரம், தங்கள் மீது நடத்தும் பண்பாட்டு வன்முறைகளை தவிர்க்க முடியாமலும், ஏற்க முடியாமலும் தவிக்கும் மனங்களின் குரலாக எழுத்திங்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ISBN எண்: 978-981-08-3220-9