
பஞ்சத்துக்கு புலி
Panchathukku Puli
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Shoba sakthi
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
Publisher :Karuppu Pradhigal
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
நூல் குறிப்பு:
ஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி
எம் பெண்களை வல்லாண்ட உம்மைக்கண்டு
மறைவிடம் ஓடியொளிந்த நாய்கள்
பிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக
கைகால்கள் கட்டப்பட்டு
பனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன்
பிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு
நடுங்கிச் சரிகிறது உயிர்
தண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும்
வாயைத்திறந்தால் மலம் திணிப்பதுமே
நாகரிகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால்
பசி தாகம் குறித்த புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன்
சித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில்
பந்தம் கொளுத்தி என் தலையைத் தீய்த்து
பிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப்போடுகிறீர்கள் என்னை
விஷேசமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன்
என் கால்களில் லாடமடித்து கொண்டிருக்கிறான்
நகங்களை பிடுங்கி எடுத்துவிட்டு
பற்களையும் பிடுங்கும் அவசரத்தில்
குறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில்
வன்மங்களை நவீனமாய் தணிக்கத்தெரிந்த மற்றயைவன்
வயர்களை என் குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான்
அடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த
உங்கள் மனைவி/மகள்/சகோதரி/யாரோ ஒருத்தி
இந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென
பலவந்தமாய் இமைப்பிரித்து தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை
கொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத் தாளாது
புதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரிசுகள்
கணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம்
மென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர்
என் மீதான அவதூறுகளை
– ஆதவன் தீட்சண்யா
ஆசிரியர் குறிப்பு;
ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.
சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.
நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.
