book

ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2

Jayakandhan Sirukathaigal (I & II Set)

₹1700
எழுத்தாளர் :ஜெயகாந்தன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :1744
பதிப்பு :7
Published on :2013
ISBN :9788183453547
Out of Stock
Add to Alert List

ஜெயகாந்தன் இந்திய இலக்கியசூழலில் உருவான முற்போக்கு அலையின் படைப்பாளிகளில் ஒருவர். தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] , பிமல் மித்ரா[பங்காளி] , யஷ்பால் [இந்தி] , முல்க்ராஜ் ஆனந்த் [ஆங்கிலம்] என அவருடன் ஒப்பிடக்கூடிய படைப்பாளிகள் சிலரே. அவர்கள் இந்திய சிந்தனைச்சூழலில் மிகப்பெரிய சலனத்தை உருவாக்கினார்கள். ஒன்று, அடித்தள மக்களை நோக்கிச் சிந்தனைத்தளத்தை திருப்பி வைத்தார்கள். அதன்பொருட்டு இலக்கிய அழகியலையே மாற்றியமைத்தார்கள். ஜெயகாந்தன் முற்போக்கு எழுத்தாளர் என்ற தளத்தில் இருந்து இன்னும் ஒரு படிக்கு முன்னகர்ந்து தனிமனிதன் என்ற கருத்தை சமூகத்தில் நிலைநாட்ட பிரம்மாண்டமான தொடர் விவாதம் ஒன்றை உருவாக்கிய படைப்பாளி. சாதியாக ,மதமாக, குடும்பமாக மட்டுமே சிந்திக்கத்தெரிந்த; தனிமனிதன் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த தமிழ்ச்சமூகத்தை நோக்கி ஜெயகாந்தன் முன்வைத்த தனிமனித சிந்தனைக்கான அறைகூவல் சாதாரணமானதல்ல. ‘அந்தரங்கம் புனிதமானது’ ‘சமூகம் என்பது நாலுபேர்’ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்று அவரது தலைப்புகளே அந்த சிந்தனைகளை ஒரு மந்திரம் போலக் கொண்டு சென்றன. சொல்லப்போனால் சமூகத்தை நோக்கிப் பேசுவது, பதிலுக்கு சமூகத்தைத் தன்னை நோக்கிப்பேசவைப்பது என்ற சவாலை தமிழில் நிகழ்த்திய ஒரே கலைஞன் ஜெயகாந்தன். அவருக்கு முன்பும் பின்பும் எவருக்கும் அது சாத்தியப்படவில்லை. - ஜெயமோகன்.