
முத்துக்கள் முப்பத்திரண்டு
Muthukkal muppathirandu
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.அ. தாயப்பன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936556
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of StockAdd to Alert List
நொறுங்கத் தின்றால் நூறு வயது, பல் போனால் சொல் போச்சு என்ற முதுமொழிகளை கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு பல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பையும் சுத்தமான பற்களால் நாம் அடையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள இப்புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது.
பொதுவாக, உணவு வகைகளை ருசிக்கவும், அகத்தின் கண்ணாடியான முகத்துக்கு வேண்டிய வசீகரத்தைத் தரவும், சொற்களை சரியான முறையில் உச்சரிக்கவும் உதவுபவை பற்களே! இவ்வாறு நம் நலனுக்கு உறுதுணையாக இருந்து, நன்மைகளைச் செய்துவரும் பற்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? சரியாகப் பராமரிக்கிறோமா? நமக்குள்ள கவனக்குறைவால், அக்கறையின்மையால், பற்களில் ஏற்படும் பலவித நோய்கள், கறைகள், ஈறுகளில் ஏற்படும் தொல்லைகள் ஆகியவற்றை உதாசீனப்படுத்தி, இவற்றின் பாதிப்பை நம்மில் பலர் அறிந்து கொள்ளாமலே இருக்கின்றோம்.
வேண்டாதவற்றை வாயில் திணித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கி நம்மையே வெறுக்கும் அளவுக்கு பற்களைப் பராமரிக்கும்(?!) நபர்கள் நம்மிடையேயும் உள்ளனர். அவர்களுக்கான நல்ல நண்பனாக, சரியான வழிகாட்டும் துணைவனாக இந்த நூல் விளங்குகிறது.
பற்களில் ஏற்படும் சேதாரம் என்பது, ஓடி விளையாடும் குழந்தைக்கும் ஏற்படலாம், சந்தையில் செய்த சண்டித்தனத்தால் மண்டையில் விழவேண்டிய அடி மாணிக்கப் பற்கள் மீது விழுந்து உடைந்தும் போயிருக்கலாம். அல்லது பராமரிப்பின்மை காரணத்தால் ஆட்டம் கண்டும் போயிருக்கலாம்... இப்படி ஏற்பட்ட சேதத்துக்கு மேலும் சேதாரம் நேராதபடி, முறையான மருத்துவம் மூலம் பற்களை காத்துக்கொள்வது நம் கடமை. அதற்கு இந்த நூல் நன்கு உதவும்.
பற்களைப் பாதுகாக்கும் முறை, பற்களை சுத்தப்படுத்தும் விதம், பற்களின் பாதிப்பினால் உடலுக்கு ஏற்படக்கூடிய கேடுகள், அவற்றை குணப்படுத்தும் வழிகள், பற்கள் சீராக இல்லாததற்கான காரணங்கள் & இவைபோன்ற கேள்விகளுக்கு இதுவரையில் பதில் தெரியாமல் இருந்திருக்கலாம்...
இப்புத்தகத்தின் வரிகளை வாஞ்சையோடு வாசித்தால், பற்கள் பற்றிய முழுமையான பதில்கள் உங்கள் பாக்கெட்டில். இந்த நூல் பல் மருத்துவம் பற்றிய பல ஐயங்களுக்கு விடையளிக்கிறது.
