book

பாரதத்தின் பக்த கவிகள்

Bharathathin pakka kavigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :224
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189936297
குறிச்சொற்கள் :சங்கீதம், பாடல்கள், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
Add to Cart

இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும்? மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் இந்த நிம்மதியைப் பெறத்தான் மானுடமே இவ்வளவு கூத்துகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

நாம் இசை வல்லுனர்களைப் பார்த்திருக்கிறோம். புலவர்களைப் பார்த்திருக்கிறோம். பக்திப் பரவசத்தில் ஊனுருக நின்றவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் ஒன்றாகத் தேனில் கலந்து இறைவனுக்குப் படைத்து, பின் புசிப்பதுபோல இசையும் புலமையும் பக்தியும் ஒன்றாகச் சேர்ந்த திருவருட் செல்வர்களான பக்த கவிகளை இந்நூலில் காண்கிறோம்.

பக்த கவிகள் என்போர், இறைவன் மேல் பக்திமேலீட்டால் கவிதைகளைப் புனைந்தும் இசையால் ஏத்தியும் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர்கள். நமக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பவர்கள். இன்றைக்கு, ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்றால் என்ன? என்று கேட்டால் சின்னக் குழந்தையும் அர்த்தம் சொல்லும். அதை எவ்வாறு தடுப்பது என்று கேட்டால் அனேகப் பெரியவர்கள் பதில் சொல்லக்கூடும், ஆனால் யதார்த்தமாக நடைமுறையில் சொல்லித்தருவதற்கு மிகமிகச் சொற்பமானவர்களாலேயே முடியும். பக்த கவிகள் நடந்துகாட்டியது போல பக்தியை இசையுடன் சேர்த்து மேற்கொள்ள முயற்சித்தால் கண்டிப்பாக மனநிம்மதியுடன் வாழலாம்.

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்த நம் தேசத்தில் வாழ்ந்த முப்பது பக்த கவிகளைப் பற்றியும் அவர்களுக்கு இறைவன் நேரில் வந்து தரிசனம் தந்தது, அவர்கள் வாழ்வில் நடந்த அசாதாரணமானதும் ஆச்சரியமானதுமான சம்பவங்கள், அவர்கள் எழுதிய பாமாலைகள், அவர்களுடைய பாடல் வல்லமை போன்றவற்றை இந்நூலில் படித்து மகிழலாம். வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து, வெவ்வேறு மொழிகளைப் பேசிவந்த இவர்கள், பக்தி எனும்போது ஒரே சிந்தனையை வெளிப்படுத்தியிருப்பதை இவர்களுடைய பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.