book

அகிலம் போற்றும் அற்புத பெண்மணிகள்

Ahilam Potrum Arputha Penmanigal

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சரஸ்வதி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :116
பதிப்பு :3
Published on :2008
ISBN :9789380892054
Out of Stock
Add to Alert List

வரலாற்றுக் காலத்தில் அரசு புரிந்த பாண்டிய மன்னர் சித்திராங்கதனின் செல்வ மகள் அல்லிராணிக்கும் மலயத்துவச பாண்டியன்
மகனாகச் சிறந்த உமையாளும் நங்கை தடாதகைப் பிராட்டியாருக்கும் பிறகு ராணி மங்கம்மாவைத் தான்  குறிப்பிடவேண்டும்.
மக்ஙம்மாள் ஒரு பெண்ணாக இருந்தும் ஆடவர்களைவிட பேரும், புகழும், சீரும், சிறப்பும் மிக்கோங்க வளமாக  வாழ்ந்து நாயக்கர் ஆட்சியை நிலைநிறுத்தினார். அரசியல் அறிவும், உலகியல் அறிவும்  உடையவர். அரசியல் தந்திரமும் வாய்க்கப்பெற்றவர்.

ஜீஜாபாய் தாய்குலத்தின் திலகமாக விளங்கிய இந்தியப்பெண்மணிகளிலே முக்கியமான ஒரு நங்கை நல்லார் ஜீஜாபாய் ஆவார். தங்கம் போன்ற மேனியும், மழலை மொழியும் எப்போதும் இன்முகம்  காட்டும் தன்மையும் அவளைப் பார்ப்போருக்கு அளவற்ற ஆனந்தத்தை அளித்தன. மகன் - சிவாஜி - மகாராஷ்டிர மன்னனாக அரியணையில் அமர்ந்ததை கண்குளிரக் கண்டாள் ஜீஜாபாய். சிவாஜி முடிசூடி பதினோரு தினங்களே ஆயின. முடிசூட்டி  விழாவின் இன்பத்தைக்கூட இன்னும் மக்கள் மறக்கவில்லை. அதற்குள் மராராஷ்டிரர்கள் அனைவரையும் துக்கக் கடலில் ஆழ்த்தும் சம்பவம் நடந்துவிட்டதே. தெய்வீகத்தாய் என்று மக்களால் போற்றப்பட்ட  ஜீஜாபாய் இந்த உலக பாசங்களுக் கெல்லாம் ஒரு முடிவு கட்டிவிட்டு சாந்தியுடன் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்தாள். ஜீஜாபாய் உயிர் துறக்கும் பொழுது அவருக்கு வயது எண்பது.

                                                                                                                                      -  எஸ் .சரஸ்வதி.