book

ஆலயம் தேடுவோம் (பாகம் 1)

Aalayam theduvom(part 1)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. சுவாமிநாதன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189780821
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

ஆலயங்கள் நமது கலாசாரச் சின்னங்கள். பக்தியோடு பண்பாடும் வளர்த்த தலங்களவை. இறையும் கலையும் இணைந்த இடங்களவை. மனதின் மேன்மையை வலியுறுத்தும் மையங்களவை.
தெய்வத்துக்கேற்பவும், வழிபடும் மக்களின் வசதிக்கேற்பவும் சிறியதும் பெரியதுமாக ஆலயங்கள் தமிழகமெங்கும் நிரம்பியுள்ளன. லட்சோப லட்சம் பக்தர்களின் கொடைகளினாலும் அரசாங்கத்தின் நிதி கிட்டியும் சில ஆலயங்கள், சிறப்பான பிராகாரங்களோடும், பொன், வெள்ளி என அலங்காரப்படுத்திய சிலைகளோடும் பிரகாசிக்கின்றன.

அதேசமயம், பல ஆலயங்கள் கவனிப்பார் அற்று, வழிபாட்டுக்குரிய அடையாளம் தெரியாமல் பாழடைந்து கிடக்கின்றன.

பெரும்பான்மை மக்களால் அறியப்படாத அத்தகைய ஆலயங்களைத் தேடிக் கண்டுபிடித்து 'சக்தி விகடன்' இதழ்கள் மூலமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் பி.சுவாமிநாதன்.

அழியும் நிலையில் இருந்த ஆலயங்களின் ஆதிவரலாறு, அதன் புராணச் சிறப்புகள், அதில் வீற்றிருக்கும் தெய்வங்களின் மகிமை, வழிபடவேண்டிய முறைகள் போன்றவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆலயத்தின் நுழைவாயிலுக்கும் அழைத்துச் செல்லும் நூலாசிரியர், அங்குள்ள பிராகாரங்கள், விக்கிரகங்கள், சிறுசிறு சந்நிதிகள், நேர்த்திக் கடன் செய்யுமிடங்கள், வேண்டுதல் மரங்கள், புனிதக் குளங்கள் போன்றவற்றை சுவாரஸ்யத்தோடு விளக்கிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்புக்களுடன் அந்த ஆலயத்துக்குச் செல்ல நினைக்கும் பக்தர்களுக்கு, 'அங்கு எப்படிப் போவது?' என்றும் வழிகாட்டியுள்ளார். சரித்திரப் புகழ் மணக்கும் ஆலயங்களைத் தேடிப் புறப்படுங்கள்; இறையருள் பெறுங்கள்.