book

டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :48
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788123412252
Out of Stock
Add to Alert List

காலம் மாறிவிட்டதாகவும், இது கணிணி யுகமென்றும், நாடு வல்லரசாகப் போகிறதென்றும் திண்ணைக்கு நாலு பேர் இன்னமும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் திணிக்கப்பட்ட மலமும் தினந்தோறும் தாழ்த்தப்பட்டவர்கள் உடலிலும், மனதிலும் பதிந்து நிற்கும் ஆதிக்க சாதி நகக் குறியும் நாம் வாழும் சமூகத்தின் அருவருப்பையும், அயோக்கியத்தனத்தையும் திமிராக அறிவிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.

ஏதோ அம்பேத்கருக்கு அந்தக் காலத்தில் நடந்தது என்று நினைக்க முடியாத அளவுக்கு இந்தக் காலத்தில் தொடரும் தீண்டாமையின் கொடுமைகளுக்குள் இழுத்து விடுகிறது இச் சிறுநூல். அம்பேத்கருக்கு பள்ளிக் கூடத்தில் நடந்தது, இன்று ஐ.ஐ.டி. யில் தலித் மாணவர்களுக்குநடக்கிறது. வடிவங்கள்தான் வேறுபடுகின்றன. ஆதிக்க சாதி வக்கிரங்கள் தொடர்கின்றன. இதோ, நூலின் அனுபவங்களை நீங்கள் வாழும் சமூக அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்.