book

அபிதா

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லா.ச. ராமாமிருதம்
பதிப்பகம் :புதுமைப்பித்தன் பதிப்பகம்
Publisher :Pudumaipithan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :1968
Out of Stock
Add to Alert List

"நம் வளமான அகமரபின் நவீனப் படைப்பாளி லா.ச. ராமாமிருதம். வாழ்வின் புற நெருக்கடிகள்கூட அவை நிகழ்த்தும் அக பாதிப்புக்கான அம்சங்களாகத்தான் இவர் படைப்புலகில் இடம் பெறுகின்றன. அக உலகின் சிக்கல்களும் சிடுக்குகளும் சுழிப்புகளும் அல்லல்களும் அலைக்கழிப்புகளும் உளைச்சல்களும் மட்டுமல்ல; அவ்வுலகின் மயக்கமும் மோனமும் ஏகாந்தமும் கவிந்திருக்கும் உலகம் இவருடையது. அதனால்தான் கரடிமலைகூட ஒரு உயிரியாக இந்நாவலில் உறவாடிக் கொண்டிருக்கிறது. ‘அபிதா’-ஒரு முழுமையான அக நாவல். இந்நாவலின் மொழி என்பதாலேயே, எண்ணற்ற சாயல்களுடன் கவித்துவமாய் சலனம் கொண்டிருக்கிறது. நுண்ணுணர்வுமிக்க படைப்பாளியின் தனித்துவ மிக்க நாவல் ‘அபிதா’. - சி. மோகன்"