book

ஜோதிஷ கணித சாஸ்திரம்

₹351.5₹370 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ண ஜோஸ்யர்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :604
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

முதலில் கணக்குச் செய்ய வேண்டிய விதிகளையும், அதிலுள்ள மற்ற அம்சங்களையும் நன்றாய்த் தெரிந்துகொண்டு அனேகமான கணக்குகளைச் செய்து அப்பியாசித்துக் கொள்ள வேண்டியது. எவ்வளவுக்கு விரைவாகவும் சரியாகவும் கணக்குச் செய்யக்கூடுமோ, அவ்வளவுக்கு வெகுசுலபமாய்த் தெரிந்து கொள்ளலாம். கணிதமுறையில் பூர்வமா ஏற்பட்டது கவடி (சோகி) வைத்துக் கணிப்பது. ஆனாலப்படிச் செய்வதில் கவடிகளை உடனுக்குடனே அப்புறப் படுத்தி விடுவதினாலே செய்த வேலையை சுலபமாய்ச் சரிபார்க்க இடமில்லாமல் தப்பிதங்கள் நேரிடுவதற்கு ஏதுவாயிருக்கிறது.
மேலும் ஒருவன் கவடிவைத்துக் கணிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிற மற்றொருவன் அதை ஊகமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அதன் வழிகளையும் மற்ற அம்சங்களையும் நன்றாய்த் தெரிந்து கொள்ள இடமில்லை. காகிதத்திலெழுதிக் கணிதம் செய்வது, தப்பிதங்களை உடனுக்குடனே மாத்திரமல்ல, எந்தக் காலத்திலும் சரிபார்ப்பதற்கு சுலபமாயும் பிறர் கற்றுக் கொள்வதற்குரிய மார்க்கமாக இருப்பதினாலும், இப்போது காகிதத்தில் கணக்கு செய்வது சாதாரணமாக இருப்பதினாலும், கவடி வைத்துச் செய்வதைப் பார்க்கையிலும் காகிதத்தில் வேலை செய்வது கொஞ்சம் நல்ல மார்க்கமானது தான் என்றும், அந்த வழியைத் தானே இதில் அதிகரித்திருக்கிறது. ஆனதினாலே முக்கியமாய் இராசி, பாகை, கலைகளைக் கூட்டவும், கழிக்கவும், பெருக்கவும், வகுக்கவும், தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.