book

காஞ்சி பரமாச்சாரியாரின் அருள்மொழிகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.கே. இராமலிங்கம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2002
Out of Stock
Add to Alert List

மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி இறை ஞானம் வளர்க்க நினைத்தவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மாமுனிவர். பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட காஞ்சிப் பெரியவர், துறவு பூண்டு இறை நெறி வளர்த்தவர். காஞ்சிமடம் வந்து, தம்மிடம் ஆசிபெற நினைப்பவர்களுக்கு அருளாசி வழங்கியதோடு, வழிகாட்டியாகவும் இருந்தவர். மகா பெரியவரின் பக்தி நெறி, வழிகாட்டும் திறன், ஈகைத் தன்மை குறித்து சக்தி விகடன் இதழில் ஆன்மிக அனுபவம் என்ற பகுதியில் எஸ்.ரமணி அண்ணாவின் அனுபவங்கள் தொடராக வந்தது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. காஞ்சிப் பெரியவர் இளைஞர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு, வளரும் இளைஞர்கள் மெய்ஞானத்தில் இருக்கும் தங்களுடைய பற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும், எப்படி தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது சான்று. ஆலயம் தொழ நினைப்பவர்கள் எப்படி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணற்ற அனுபவங்களை காஞ்சிப் பெரியவரின் வழிநின்று விளக்குகிறார் நூலாசிரியர். இந்நூல், காஞ்சிப் பெரியவரை அறிய நினைப்பவர்களுக்கும், அவரது ஆன்மிக வழிகாட்டலை புரிய விழைபவர்களுக்கும் துணை நிற்கும்.