
யுத்த தூஷணம்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷோபா சக்தி
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
Publisher :Karuppu Pradhigal
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2024
Out of StockAdd to Alert List
நூல் குறிப்பு:
போரைப் பற்றிய சாகசக்கதைகள் நிரம்பிய அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், இயக்கத் தலைமைகளால் போர் எதிர்ப்பை ஓர் உளப்பூர்வ சமூக இயக்கமாக்க ஒருபோதும் மாற்ற இயலாது. இதைப்போன்றே மரணதண்டனை வேண்டாமென்று சொல்லும் துணிபும் தகுதியும் எல்லாவித மரணதண்டனைகளையும் எதிர்ப்பவர்களுக்கே உண்டு.
இந்த நூலின் எந்தப் பக்கத்தைப் பிரித்து விரித்தாலும் எல்லாவிதப் போரையும் எல்லாவித மரணத்தையும் எதிர்த்து படைப்பாக்க மனத்திறப்போடு உயிர்த்திருக்கும் சொற்களாலான உரையாடலையே காணமுடியும்.
இதுதான் ஷோபாசக்தியை உலகப் படைப்பாளிகளின் வரிசையில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதைத்தவிர மேலதிக குறிப்புகள் எங்களிடமில்லை.
இந்நேர்க்காணல்களில் அதிருப்தியுறுவோர், இன்னும் சில கேள்விகளை எழுப்ப விரும்புவோர் இன்னொரு உரையாடலுக்கு தயாராவதைத் தவிர வேறு எதை நாம் சொல்ல முடியும். ஆமாம் உரையாடல் தொடர்கிறது.
ஆசிரியர் குறிப்பு;
ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.
சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.
நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.
