book

செந்தமிழ் அகராதி

₹750
எழுத்தாளர் :ந.சி. கந்தையா
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :723
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

புலவருக்கும் மாணவருக்கும் இடைப்பட்டவர்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய நடுத்தர அகராதி ஒன்று இல்லாமை தமிழ் ஏமாழிக்கே இழுக்கு என்று கூறலாம். சென்னைப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்டுள்ள பேரகராதி மிக விரிந்தது. விலை உயர்வாக இருத்தலின் அதனை எல்லோரும் வாங்கிப் பயன்படுத்துவது எளிதன்று. வேறு வெளிவந்துள்ள அகராதிகளும் மிக விரிவடைந்தனவாகவும் அதிக விலை உள்ளனவாகவு மிருக்கின்றன. அவை எளிதில் கிடைப்பதும் இல்லை. கையகராதி என வெளிவந்த ஒரு சிலவற்றில், நேடும் சொற்களைக் காண்பதரிது. இந்நிலைமையில் மாணவர் புலவர் இடைப்பட்டவர் என்னும் முத்திறத்தினருக்கும் பயன்படக்கூடியதும் குறைந்தவிலையிற் கிடைக்கக்கூடியதுமாகிய ஓர் அகராதி வெளிவருதல் இன்றியமையாததாயிற்று. ஆகவே, நாம் தமிழ்த்தாய்க்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந்நூலைச் செய்து முடித்தோம்.