book

களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24)

₹1200
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Vishnupuram Publications
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :816
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392379444
Add to Cart

இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள்.

எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?

எந்த அழிவுக்குப்பின்னரும் மீளமீள தன்னைக் கட்டிக்கொள்ளும் ஆற்றலை மானுடம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது? அந்த அடிப்படையான உயிர்விசைதான் அனைத்து அறங்களையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்கிறதா? போருக்கு பிந்தைய அனைத்தையும் ஒரே வீச்சுடன் தொகுத்துக்கொள்ளும் இந்நாவல் அந்த உசாவல்களை முன்வைக்கிறது.