
மாயக்கண்ணி
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதிரன்
பதிப்பகம் :புலம் பதிப்பகம்
Publisher :Pulam Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள் ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இயல்பு இவையிரண்டுமற்ற வெளியொன்றில் பயணிக்க எத்தனிக்கையில் நேர்கிற ஊடாட்டம் வாழ்வின் நெடும்பயணத்திற்குமானது. இந்தக் கதைகள் கனவுலகிற்கும் யதார்த்தத்திற்குமான இயல்புக்கும் இயல்பற்றதற்குமான இடைவெளியில் வாய்க்கின்ற வாழ்வியக்கத்தைச் பேசுகின்றன.
