
யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்
Yaalpana Thamilar Kalasarathil Sathiyamum Inathuwamum
₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரம்சோதி தங்கேஸ்
பதிப்பகம் :எழுநா வெளியீடு
Publisher :Ezhuna Veliyedu
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2013
Out of StockAdd to Alert List
யாழ்ப்பாணத்தின் பிரதான சமூக ஒழுங்கமைப்பு முறையான சாதி அமைப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வளர்ச்சிகள், மாற்றங்கள் பற்றிய மிக முக்கிய குறிப்புக்களும் கருத்தாடல்களும் பரம்சோதி தங்கேசுடைய கட்டுரைகளில் இடம்பெறுகின்றன. அவரது கட்டுரைகளில் காணப்படும் தரவுகள், கூற்றுக்கள் ஆகியன பல கருத்தாடல்களுக்கு இடம்கொடுக்கக் கூடியனவாக இருக்கும் அதே வேளையில் நேர்மைத் தன்மையினையும் அதனை வெளிப்படுத்தும் புலமை வேட்கையினையும் கொண்டிருக்கின்றன.
கார்த்திகேசு சிவத்தம்பி
மறைந்த தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
பரம்சோதி தங்கேஸ் சாதியம் தொடர்பான கற்கைசார் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகத் தன்னை ஈடுபடுத்திவருபவர். தனது கலைமாமணிப் படிப்பிற்கான ஆய்வுக்கற்கையை யாழ்ப்பாணத்தில் சாதி மற்றும் இனத்துவ அடையாளங்களுக்கிடையிலான இடைவிளைவுகள் பற்றியதாக மேற்கொண்டவர். ஒரு சமூகவியலாளராக சாதியத்தின் கட்டுமானத்தை குறிப்பாக போர் மற்றும் போரின் விளைவுகளால் அதன் கட்டுமானத்தில் ஏற்பட்ட தாக்கங்களை கற்கைசார் ஒழுங்குடனும் தரவுகளுடனும் தனது எழுத்துக்களில் முன்வைத்துள்ளார்.
