book

நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :C.S. ராஜு, T.V. சிவகுமார்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

தன்னம்பிக்கை, சுதந்திரம், துணிச்சல் ஆகியன பயனுள்ள இயல்புகளே. ஆனால் இவை ஒரு குழந்தையின் தன்னுணர்வு, தன்னிலையில் இருந்து தோன்றும் அசலான இயல்புகளாக இருக்க வேண்டும். தன்னுணர்வு ஒருவருக்கு உள்ள வாழ்க்கைப் பார்வையில் இருந்து, அனுபவத்தில், அறிவில், நம்பிக்கைகளில் இருந்து தோன்ற வேண்டும். நான் இப்படியானவன், இப்படியானவள் என ஒரு குழந்தையால் சுலபத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாது. வளர்ந்தவர்களால் ஓரளவுக்கு இது முடியும். “நான் ஒரு நடைமுறைவாதி”, “நான் ஒரு லட்சியவாதி”, “நான் ஒரு பக்தன்”, “நான் ஒரு அவநம்பிக்கையாளன்”, “நான் ஒரு போராளி”, “நான் ஒரு தனிமை விரும்பி” இப்படி. இது ஒரு சாராம்சமான அடையாளம் அல்ல. இது ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள தலைப்படுகிறார் என்பது மட்டுமே. ஆனால் குழந்தைகளுக்கு இந்த சமூகம், கலாச்சாரம், அதன் குறியீடுகள், கனவுகள், மாறுபட்ட அனுபவங்கள் வழி தம்மைக் குறித்து ஒரு சித்திரத்தை ஏற்படுத்திக் கொள்ள கால அவகாசம், சந்தர்பங்கள், அறிவு இருப்பதில்லை. ஆகையால் ஒரு குழந்தை பத்து, பன்னிரெண்டு வயது வரை தாம் பார்க்கிறவர்களை வைத்தே தம்மை அது அடையாளப்படுத்துகிறது. நாம் ஒரு கண்ணாடி முன் நின்று பார்க்கும் போது “என்னுடைய பிம்பம் அங்கு தெரிகிறது” என நினைக்கிறோம். ஆனால் ஒரு குழந்தையோ “அந்த பிம்பம் மற்றொரு நபர், அந்த பிம்பம் அழகாக இருக்கிறது, அதைப் போல நான் இருக்க விரும்புகிறேன் என யோசிக்கிறது. (தன் பிம்பத்தை கண்ணாடியில் காணும் ஒரு சிறிய நாய் வீட்டுக்குள் யாரோ வந்து விட்டார்கள் என குறைப்பதை போல.) இந்த கண்ணாடி தான் ஒரு குழந்தையைப் பொறுத்தமட்டில் அதன் அம்மா, அப்பா, ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், கார்டூன் பாத்திரங்கள், சாகச சினிமா கதாபாத்திரங்கள். இவர்கள் ஏற்படுத்திய மனப்பிம்பமே அந்த பிரதிபிம்பம். அதனாலே பதின் வயதில் கூட குழந்தையின் தன்னுணர்வு மாறிக்கொண்டே வருகிறது. பதின் வயது கடந்து ஹார்மோன்கள் நிலைப்பெற்று, நரம்பணு மண்டலம் உறுதியான பின்னர் இருபதுகளில் ஒரு குழந்தை இவ்வுலகை வளர்ந்தவர்களைப் போல அறிய ஆரம்பிக்கிறது. அதன் தன்னுணர்வு அப்போது தான் ஓரளவுக்கு ஸ்திரப்படுகிறது.