சினிமாவும் நானும்
₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இயக்குநர் மகேந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :368
பதிப்பு :3
Published on :2019
Out of StockAdd to Alert List
நம் கல்லூரியில் காதலிக்கிறவர்கள் என்ன பாடு படுகிறார்கள். ஊரே கூடிப்பேசுகிற அளவுக்கு அவர்கள் காதலித்துவிட்டு இன்றைக்கு எவ்வளவு அவமானப்படுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் நல்லாத் தெரியும். ஆனால், இவர் ( எம்.ஜி.ஆரைக்காட்டி) சினிமாவில் டூயட் பாடிக்கொண்டே காதலியோடு ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓடிப்பாடி ஆடிக்காதலிக்கிறார். இவர் காதலிக்கிறதைப்பார்த்து சினிமாவுலே எந்தப் பிரின்சிபாலும் கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை. ஊர்க்காரர்களும் இவர்கள் காதலிப்பதைப் பொருட்படுத்துவதில்லை”
மண்டபம் கைதட்டலினால் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் திகைத்தார். தொடர்ந்து அந்தப்பேச்சைக்கேட்டு ரசித்த எம்.ஜி.ஆர், தனது ஏற்புரையையடுத்து விடைபெறும்போது ஒரு காகிதத்தில் ” நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன்கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர். வாழ்க “என்று எழுதிக்கொடுக்கிறார். இச்சம்பவம் நடந்த திகதி: 30-11-1958.
இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் அடங்கிய நூல்தான் மகேந்திரன் எழுதியிருக்கும் சினிமாவும் நானும். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. சென்னையில் நடத்திய மித்ர பதிப்பகம் இந்த நூலை 2003 இல் வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 2005 இல் வெளியானது.
இந்த நூலின் தொடக்கத்தில், நீங்களும் நானும் என்ற தலைப்பில் மகேந்திரன் இவ்வாறு தெரிவிக்கின்றார்:
” சினிமாவும் நானும் என்ற தலைப்பைக்குறித்து உங்களிடம் நான் கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கிறது. சினிமா பார்ப்பதையே தங்களின் முதன்மையான பொழுதுபோக்காகக் கொண்டவர்களும், இப்படி ஒரு தலைப்பில் தங்கள் அனுபவங்களையும் அபிப்பிராயங்களையும் புத்தகமாக எழுதலாம். அல்லது சினிமாத்துறையில் நல்ல அனுபவம் உள்ள ஒரு எடிட்டரோ, ஒளிப்பதிவாளரோ, ஆர்ட் டைரக்டரோ, ஒரு ஒப்பனைக்கலைஞரோ, இல்லை, நீண்ட பல வருடங்கள் பணிபுரியும் சினிமா தயாரிப்பு நிர்வாகியோ தங்களின் அனுபவங்களை ” சினிமாவும் நானும்”என்ற தலைப்பில் எழுதலாம். அவர்கள் அப்படி எழுதுவது படிப்பவர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.