book

உதயபானு கார்மேகம்

₹355+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோகுல் சேஷாத்ரி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :486
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் துவக்கம். சோழ மன்னரான இராஜராஜரின் பிறந்த நாளில் அவரது உயிரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதிகாரர்களின் இருப்பிடம் சேர நாடு என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் ஆதாரங்கள் கிட்டவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தின் அடியையும் முடியையும் அறிய முற்படும் பேரரசர், சேர நாட்டிற்குத் தமது நம்பிக்கைக்குரிய அதிகாரியான படைத்தலைவர் பரமன் மழபாடியாரையும் முன்னாள் சோழப் படைவீரர் அம்பலவாணரையும் அனுப்பி வைக்கத் திட்டமிடுகிறார். பயண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மழபாடியாரின் நண்பரான உறையூர் வைத்தியரிடமிருந்து வரும் மர்மத் தகவல் அடுத்தடுத்து பல சம்பவங்களுக்கு வித்திடுகிறது. விசாரணை மேலும் தீவிரமடைகையில் தலைநகரில் நடைபெற்ற கொலை முயற்சிக்குப் பின்னால் முப்பதாண்டுகாலப் பகையும் பழி உணர்ச்சியும் எண்ணற்ற சிக்கலான சம்பவங்களும் பின்னிப் பிணைந்துள்ளதை நண்பர்கள் கண்டறிகின்றனர்.

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காட்டும் வளமான வரலாற்றுப் பின்னணியில் அரசர், அரசியர், ஆடற்பெண்டுகள், உவச்சர், சிற்பிகள், ஒற்றர்கள், ஆபத்துதவிகள் என்று எண்ணற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி உலவவிட்டு அந்தக் கால வாழ்க்கையைத் துல்லியமாக அப்படியே உருவாக்கிக் காட்டியுள்ளார் கதாசிரியர். வாருங்கள்! காவிரியால் வளம் பெருக்கும் சோழ மண்டலத்திற்குள் நுழைவோம்…