தூக்கம் வரவில்லையா?
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ஶ்ரீநிவாஸன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2019
Add to Cartபடுக்கப் போவதற்கு முன்னதாக குளிக்க அல்லது பல் துலக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. செய்ய வேண்டாம் என்று சொல்ல முடியாது.நல்ல தூய்மையான தூக்கம் என்பது தூக்கத்துக்கு வழக்கமான நேர அட்டவணையை உருவாக்குவது, உணர்வைத் தூண்டும் உணவு வகைகள் மற்றும் மதுவைத் தவிர்ப்பது, தூக்கத்துக்கான சூழலில் கவனம் செலுத்துவது ஆகிய தூக்க சூழ்நிலைக்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதை இது குறிக்கும்.நம் படுக்கை அறைகள் என்பது தூக்கத்துக்கான இடமாக இருக்க வேண்டும், மற்றவற்றுக்கு குறைந்த இடமே தர வேண்டும்.பெரும்பாலானவர்கள் இருளான அறையில், பொருள்கள் குவித்து வைக்காத, குளுமையான மற்றும் பிற சாதனங்கள் இல்லாத, கவனத்தை திருப்பும் அம்சங்கள் இல்லாத அறையில் நல்ல தூக்கத்தைப் பெறுகின்றனர்.நீங்கள் எங்கே இருந்தாலும், படுக்கப் போவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக திரைகளைப் பார்க்காத நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். (டி.வி. செல்போன், கம்ப்யூட்டர் இல்லாத நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.) பெரும்பாலான டி.வி.கள், ஸ்மார்ட்போன்கள் வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் ப்ளூ வெளிச்சம் உங்கள் மூளையை அதிக நேரம் விழிப்பாக வைத்துக் கொண்டிருக்கும்.