book

உழைப்பை ஒழிப்போம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பால் லஃ பார்க் பாப் ப்ளாக்
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of Stock
Add to Alert List

முதலாளித்துவ நாகரீகம் ஆட்சி செய்கிற அனைத்து நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு விந்தையான மனக் கோளாறு பீடித் திருக்குறள் மனக் கோளாறு பீடித்திருக்கிறது. அந்த விந்தையான மனக்கோளாறு நவீன சமுதாயத்தில் மேலோங்கியிருக்கிற தனிப்பட்ட துயரங்கள் மற்றும் கூட்டுத் துயரங்களின் விளைவாக இருக்கிறது. இது வேலையின் மீது மனிதன் கொண்டுள்ள பற்றுதல் ஆகும். வேலைக்காக ஏங்கும் மனநிலை ஒரு தனி நபரையும் அவரது பரம்பரையினரையும் முழுமையாகச் சோர்ந்து போகச் செய்யும் அளவுக்கு விரிவடைந்து கொண்டிருக்கிறது. மத குருக்கள், அரசியல் பொருளாதாரவாதிகள், மற்றும் ஒழுக்கவாதிகள் ஆகியோர் அந்த மனக்கோளாறுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, வேலையைப் புனிதமாக்கியுள்ளார்கள். குருட்டுத் தனமான மற்றும் வரையரைக்குட்பட்ட மனிதர்களான அவர்கள், அவர்களுடைய கடவுளை விட அறிவாளிகளாக இருக்க விரும்புகிறார்கள்; கேவலமான, தகுதியற்ற, பூச்சிகளாக இருக்கும் அவர்கள், அவர்களுடைய கடவுளால் சபிக்கப்பட்டுள்ளவற்றைப் பெருமைப் படுத்த முயற்சி செய்துள்ளார்கள்.