book

பொருட்களின் கதை

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆனி லியோனார்டு
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of Stock
Add to Alert List

பீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருளென நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிப்பலிக்கிறதா? மீண்டும் சிந்தியுங்கள். ஆனி லியோனார்டு குப்பைக் குழிகளின் மீது பித்துப் பிடித்தவர். “த ஸ்டோரி ஆஃப் ஸ்டஃப்” என்னும் பரப்பரபூட்டும் இணையதளப் படத்தை உருவாக்கியவர். இன்றைய உலகத்தின் முன்னிருக்கும் பெரும் பிரச்சினைகளுக்கு அவரது ஒரே விளக்கம்: நமது வாழ்வில் பொருட்கள் ‘ மிகவும் அதிகமாக’ இருக்கின்றன என்பதுதான். அதிர்ச்சியூட்டும் இந்த நூலில் லியோனார்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எல்லாப் ‘பொருட்களின்' கதையையும் கூறுகிறார் – பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், கைப்பேசிகள், ஜீன்ஸ் துணி, புத்தகங்கள், பூச்சிக்கொல்லிகள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவை எங்கிருந்து வருகின்றன, எவ்வாறு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, வீசியெறியப்படும்போது அவை உண்மையில் எங்கே சென்றடைகின்றன? நமது ‘பொருள்சார் பொருளாதாரம்’ வழியாக நாம் செய்யும் சாகச சவாரியில் நம் வாழ்வு நாசமாவதையும் புவிக்கோளின் அழிவிற்கான கட்டுப்பாடில்லா நுகர்வுப் பழக்கங்களையும் லியோனார்டு விவரித்துக் காடுகிறார். இந்தப்புத்தகத்தில் பேசப்படும் புரட்சிகரமான எளிய கோட்பாடு உங்கள் வாழ்க்கையை நிரந்திரமாக மாற்றும்.