book

ரஜினி

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.தீனதயாளன்
பதிப்பகம் :சூரியன் பதிப்பகம்
Publisher :Suriyan Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

திருடியிருக்கான். சினிமா பார்க்கத்தான். பளீர் பளீர்னு அடி வாங்கியிருக்கான். பெல்ட்டி னாலதான். சிவாஜி ஏறிக் குதிக்காத சுவர் இல்ல. போதை ஏறக் குடிக்காத சாராயமில்ல. அவன் என்ன செய்யல?”- இப்படி தன்னைப் பற்றி உள்ளதை உள்ளபடி பேசுவதுதான் ரஜினியின் இயல்பு. எந்த உயரத்துக்குச் சென்றாலும் தரையில் கால் பதித்து நடக்கும் எளிமைதான் அவரது வெற்றியின் ரகசியம். சிவாஜி ராவ் என்ற சாதாரணன், தன்னிகரற்ற சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபமெடுத்தது சாகச சரித்திரம். சூப்பர் ஸ்டாரான ரஜினி, ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து வருவது விநோத விசித்திரம்.எண்பது ஆண்டு கால கலை உலக வரலாற்றில், ரஜினியைப் போல் முழுக்க நசுக்கப்பட்டும், நாடாளும் தகுதி உடையவராக உயர்ந்தவர் யாரும் கிடையாது. தனக்கான அரியணையில் அடுத்தவர்களை அமர வைத்துப் பார்க்கும் பற்றற்றவர். முதுகில் குத்தியபோதும் தன் இதயத்தை வானம்போல் திறந்து வைத்தவர் ரஜினி. உலகம் அவரைப் பைத்தியக்காரன் என்றது. அதே உலகம்தான் அவரது ஒவ்வொரு துளி வியர்வைக்கும் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கக் காலமெல்லாம் காத்திருக்கிறது.சிவாஜிராவ் என்ற மனிதனின் விஸ்ரூபத்தையும், ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்தின் சறுக்கல்களையும் பாரபட்சமின்றி, அரிய புகைப்படங் களுடன் பதிவு செய்திருக்கிறது இந்நூல். ஸ்பீட், ஸ்டைல்amp;nbsp; இவ்விரண்டும் ரஜினியின் பலம். நூலாசிரியர் பா.தீனதயாளனின் எழுத்தும் அப்படியே..