book

பதினெண் புராணங்கள்

₹485+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.ச.ஞானசம்பந்தன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :780
பதிப்பு :5
Add to Cart

பாரத தேசத்தின் பழம் பெருமையைப் பாருக்குப் பறை சாற்ற வந்தவை இரண்டு இதிகாசங்கள். இவை பிறக்க மூல கர்த்தாவாய் அமைந்தவை புராணங்கள். இப்புராணங்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை பதினெண் புராணங்கள். இப்புராணங்கள் வேதகாலத்திற்கும் வெகுகாலம் முற்பட்டவை என்று இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப் புராணங்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே வழிவழியாக வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்துள்ளன. இவர்தான் நூலாசிரியர் என்று அறியப்படவில்லை. வடமொழியிலிருந்த இந்தப் புராணங்களைத் தமிழ் மக்களுக்குத் தரவேண்டுமென்னும் பேரவா கொண்ட பேராசிரியர் அ. ச. ஞா. அவர்கள் தமக்கே உரிய இலக்கிய நயத்தோடும் சொல்லாட்சித் திறத்தோடும் நூலைத் தமிழில் படைத்துத் தந்துள்ளமையை அவர்தம் முன்னுரை நமக்கு நன்கு விளக்குகிறது. மும்மூர்த்திகள் என்று இந்து சமயத்தினரால் வணங்கப் பெறும் பிரம்மா, விஷ்ணு. சிவன் ஆகியோரின் அளப்பரிய ஆற்றல்களைப் பற்றிப் பேசும் பதினெண் புராணங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன.