உலகச்சொய்திகள் ஆயிரம் ; அறிவியலின் வளர்ச்சியோட்டத்திற்கு மனிதன் ஈடு கொடுத்து அறிவியல்
முன்னேற்றங்களை -கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான் . இன்னும் அரிய கண்டுபிடிப்புகள்
நிகழ்ந்தவண்ணமுள்ளன. அவற்றையும் மனிதன் அவ்வப்போது அறிதல் வேண்டும். இல்லையேல் அவன் அறிவு
வளர்ச்சியற்றவனாகக் கருதப்படுவான் . தற்காலத்தில் சமுதாயம், வரலாறு , வாணிகம், கணிதம், புவியியல், மொழி
போன்ற துறைகளில் அறிவியலின் செல்வாக்கு மிகுந்துவிட்டது. இவை புதிய அறிவியல் துறைகளாக
விளங்குகின்றன. அவற்றின் வளர்ச்சித் தன்மைகளை அறிந்துகொள்வது அடிப்படையானதாகும். இவ்அறிவியலே
பொது அறிவு' எனப்படுகின்றது. இவ் அறிவுத் திறனைச் சோதிப்பதற்குப் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பணியிடங்களுக்கும் பலபேர் போட்டியிடும் அவ்வேளையில் 'பொது அறிவு ' ஒவ்வொரு வேலைதேடும்
இளைஞனுக்கும் தேவையான ஒன்றாகும் . பொது அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கே இவ்வகை நூல்கள்
பயன்படுகின்றன. எனவே நமது பதிப்பக நூல்கள் அத்தகைய தேவைகளை நிறைவு செய்கின்றன . இந்நிலையில் எமது
புதிய வெளியீடான திரு. சி. தனசேகரன் அவர்கள் தொகுத்த ' உலகச் செய்திகள் ஆயிரம் ' என்னும் நூலைத்தந்போது
வெளியிடுகிறோம்.
- பதிப்பகத்தார்.