அருணம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்பது பொருள். நெருப்பு மலையாய் நின்றபோது சிவந்து காணப்பட்டது ஆதலின், அருணாசலம் என்ற பெயரும் பெற்றது. ருணம் எனபதற்கு பந்தம் என்று பொருள்கொண்டு,அருணம் என்றால் உயிருக்கு உள்ள மும்முல பந்தங்களை நீக்குதலின்,அப்பெயர் பெற்றது என்றும் கூற இடம் உண்டு.எனவே இது அருணாசலம் ஆயிற்று.