சிவஞானபோதம் முதலாகிய சமய ஞான நூல்கள் மிகக் கடினம் என்பர். முதியவர்களும் அறியவொண்ணா இருப்புக் கடலையை ஒத்தன என்பர். அவைகளில் கண்ட ஞானத்தைச் சிறுவர்களும் குழந்தைகளும் அறிய முடியுமா எனக் கேட்பர். அறிய முடியும் என்று இந்த இச்சிறு நூல் கூறுகிறது. கதைகள்,உதாரணங்கள் மூலமாகச் சொன்னால் எந்தச் சிறு குழந்தையும் அறிய முடியும் அல்லவா? அம்முறையினையே இந்நூல் எடுத்தாளுகிறது. படித்துப் பின் முடிவு கூறுக.