வரலாற்று நிகழ்வுகளையும், வரலாற்று மாந்தர்களையும் மையமாகக் கொண்டு, எத்தனையோ புதினங்கள் தமிழ் இலக்கிய உலகில் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மை, நல்ல இலக்கியப் படைப்பு என்றளவில் படித்தவர்கள் மனத்தில் இடம்பெறும்.கவிஞரும் எழுத்தாளருமான தோழர் இளவேனில் ‘காருவகி' என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதயிருக்கிறார். காருவகியின் வெளியீட்டு விழா, 10.06.2012, ஞாயிறு அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடந்தது. அழகான தமிழ்ப் பெயரைச் சூடி வெளிவந்திருக்கும் இந்நூல், கலிங்கப்போர், அசோகனின் மனமாற்றம் என்ற வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.