நூல்களின் வரலாறும் நூலாசிரியர்களின் வரலாறும் பாஷை வரலாற்றோடு நேரே சம்பந்தப்பட்டனவல்ல. எனினும் ஓராற்றாற் சிறிதளவு இயைபுண்டு. அவ்வியைபு நினைவிலிருக்க வேண்டும். பொருள் அறிவுறுக்கும் ஒலிகளின் தோற்றமும் சொல்லாக்கமும் பேச்சு வழக்கும் அது பரவியவாறும் பாஷையாயினமையும், பாஷையின் நெடுங்கணக்கும், எழுதப்படுமாறும், ஏட்டு வழக்கும், இலக்கண வரம்பும், பாஷையமைப்பும், சொன்மரபும், நூன்மரபுமாகிய இவையனைத்துமே பாஷை வரலாற்றின் விஷயங்களாம். இந்நூலின் பொருளடக்கத்தை ஒரு முறை உற்று நோக்கின் இந்நூலினியல்பு இன்னதென விளங்கும்.