
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Iniyavai Iniyavai Iraianbu
Free shipping over ₹500
✓ Ready to ship
இறையன்புவின் பேனா இளைஞர்களுக்கு எழுச்சியம் அவரது பேச்சு அயர்ச்சியை
மாற்றிப் புத்துணார்ச்சியுட்டும் முயற்சி செய்வதற்கான தன்னம்பிக்கை
முனைகாட்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகிய அவரது அணுகுமுறைகள்
அனைத்தும் ஆரோக்கியமானவை. “இனியவை இனியவை இறையன்பு படைப்புகளாம்”
• முதல் இரண்டு வருடங்களுக்குப் பள்ளிக் குழந்தைகளின் மனதில் அன்பு
குறித்த பாடங்கள், மனித நேயக் கதைகள், கவிதைகளைப் பதிக்க வேண்டும் என்று
இந்நூலில் இறையன்பு எடுத்துரைக்கிறார்.
• ஆன்மீகம் என்பது அகங்காரம், சுயநலம், பிடிவாதம் ஆகியவற்றை உதிர்ப்பது
என்றும் உண்மையும், நேர்மையும் கொண்டது என்றும் அவா் இந்நூலின் மூலம்
உணர்த்துகிறார்.
• அறிவு முதலீடு, உழைப்பு மூலதனம், நம் வியார்வையே நம்மீது தெளிக்கும்
பன்னீர் என்று உழைப்பின் மகிமை போற்றப்பட்டுள்ளது.
• இந்நூலைப் படிப்போர் வாழ்வில் எதிர்ர்கொள்ளும் நிகழ்வுகள் இனியவை,
இனியவையாகவே இருக்கும் என்பது உறுதி.
• குழந்தைகளுக்கு வறுமையும் தெரிய வேண்டும் பெற்றோர் படுகிற சிரமமும் தொிய
வேண்டும். துயரமும் தொிய வேண்டும். துன்பமும் புரிய வேண்டும், பசியும்
அறிய வேண்டும் பிணிக் கொடுமைகளும் உணர வேண்டும்.
• உழைப்பின் உன்னதமும், வியர்வையின் மகத்துவமும் கூட அவர்களுக்குப்
போதிக்கப்பட வேண்டும். அதுதான் வெளியே எவற்றைத் தேட வேண்டும், எப்படித்
தேட வேண்டும் என்கிற நேர்மையைக் கற்றுத் தரும் சூழலை உண்டாக்கும் என்று
கூறியுள்ளார்.
• திருமணம் என்பது அன்பின் ஆழத்தில் அஸ்திவாரமாக்கப்பட்டால் அது
நீடித்துவாழும். இனக் கவர்ச்சியே மையக் கருத்தானால் அது திரிந்து போகும்.