"உலகில் விளைகின்ற தானியங்கள் , காய் - கனிகள் செயற்கையாகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றின்
சுவைகளையும் தனித்தனியே அறிந்துகொள்ளும் தன்மை ஆறங்குல நாக்குக்கு அமைந்திருப்பதில் ஒரு விந்தையான சூத்திரம் இருக்குறது. உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூத்திரத்துக்குக் கட்டுப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதைப்போல் வெற்றிடமான பேரண்டத்தில் கோடிக்கணக்கான அண்டங்களும் ,ஒவ்வொரு அண்டத்திலும் பல கோடிக்கணக்கான நட்சித்திரங்களும் உள்ளன. அவையெல்லாம் ஒரு சூத்திரத்திற்குக் கட்டுபட்டு இயங்கிக் கொண்டிருப்பதால்தான் இந்த உலகம் பல கோடிக்கணக்கான ஆண்டுகளைத்தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த உலக இயக்கம் மிகவும் விந்தையானது. அதனை அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டேயிருக்கிறார்கள். 'வியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள் ' என்னும் இந்நூலில் ஏராளமான அறிவியல் உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன."