சோ. தர்மனின் பாத்திரங்கள் 'கரிசல்' மண்ணின் அசலான மனிதர்கள். அவர்கள் மேனியில் கரிசல் மண் படிந்திருக்கும் அல்லது கந்தகம் படிந்திருக்கும். அதே சமயம், அவரது எந்தக் கதையிலும் கோஷங்கள் உரத்து ஒலிக்கவில்லை. மண் மீதும், மனிதர்கள் மீதும் அவருக்குள்ள அக்கறையும் பரிவும், ஈரமும் அவரது சிறுகதைகளில் வெளிப்பட்டுள்ளன.
சோ. தர்மனின் சிறுகதைகளில் எந்த நவீனத்துவ 'இஸங்களின்' பாதிப்பும் படியவில்லை. மாறாக, தன் வாழ்விலிருந்தே கதைக்கருக்களைத் தேர்ந்தெடுக்கிறார். தான் சார்ந்த எந்த இயக்கங்களின் சாயல்களோ, மனச்சாய்வோ தன் எழுத்துகளின்மீது விழாமல் பார்த்துக் கொண்டிருப்பதே இவரின் தனித்தன்மை.
- சிபிச்செல்வன்