நூறு ஆண்டுகளுக்கு முன் வடஇந்தியாவில் வாழ்ந்த இந்துக்களின் வாழ்வியல் முறைகளையும், மதச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் கண்டுணர்ந்து கேட்டறிந்து கீ.யி. வில்கின்ஸ் எழுதிய 'Modern Hinduism' என்ற நூலின் மொழிபெயர்ப்பே இந்நூல். இந்த நூல் வெளியான ஆண்டு 1887. நூறு ஆண்டுகளுக்கு முன் இந்து மதப் பெண்கள் மற்றும் விதவைகளின் நிலை, இந்துக் குடும்பங்களின் கட்டமைப்பு, இந்துக்களின் தினசரி வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், அவர்களின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பின்னிப் பிணைந்து வரும் மதச் சடங்குகள் பற்றிய ஒரு ஆவணமாக இந்நூலைக் கருதலாம்.