நீந்திக் கடக்க முடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை அதன் மன வெளியை, மௌனங்கள் வழியே விரிந்து செல்லும் அதன் காதல் வெளியை, ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதிபாலனின் எழுத்து. விரித்துக் காட்டும் காட்சியின் ஊடே, மன ஒலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெளிந்து கொண்டிருக்கிறது. இவரின் மொழியின் தெறிப்பில் - காட்சி விவரிப்பாகவும் உரையாடலாகவும் ஊடுறுவி விரிவான சூழலை உருவாக்கி, நிஜத்துக்கு அருகே கொண்டு போய் நிறுத்திவிடுகிறது. இதுவே கலையின் உச்சமாகி விடுகிறது.