"நிலை குயவன் கைப்பானையை “வெறும் மட்பாண்டம், கெட்டு விடும்” என்று எள்ளி நகையாடியவர் கைக்காமராவில் அதை யொரு படம் பிடித்துக் கொண்டு “இனி காலத்திற்கும் நிலைக்கும்!” என்றார். குடிக்கத் தண்ணீர் கேட்டவரிடம் “நக்கிக் குடியுங்கள், அல்லது உறிஞ்சிக் கொள்ளுங்கள் - நீங்கள் எடுத்த படத்திலிருந்து,” என எடுத்துக் கூறினார்கள் குயவனும், கவிஞனும்."