அருணோதயம் வெளியீடுகளிலே வழி காட்டுதல் இல்லாமல் இருக்காது. பயனுள்ள கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனம் நிறைவு தரவேண்டும். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை கதைகளிலே கலந்திருக்க வேண்டும். இதை மனதினிலே கொண்டால் நிச்சயமாக நல்ல நூல் என்று போற்றப்படும். இந்த வகையிலே நானாகிய நீ' என்ற இந்த நாவல் வாசகர்களின் மனங்களைக் கவரும் என்பது நிச்சயம்.