கடிகாரத்தையும்... சந்நிதியையும் மாறி மாறி இரு முறை பார்த்தவள், சந்நிதி முன்னே நிற்போரை மறைத்தபடி ஓங்கி வளர்ந்திருந்த தூணின் மீது சந்தேகம் கொண்டவளாய், அமர்ந்திருந்த இடத்தை
விட்டெழுந்து, சந்நிதி நோக்கி இரண்டெட்டு எடுத்து வைத்தாள். "பிரகாரம் வரும் போது, ரைட் டு லெஃப்ட் தான் வரணும், மணி! நாலஞ்சு ஸ்டெப் எக்ஸ்ட்ரா எடுத்து வைக்கிறதில் உனக்கென்ன பிரச்சனை?” என்று மனதோரமாய் கேட்ட குரல், முன்னே எடுத்து வைத்த அடிகளைப் பின்னுக்கு இழுத்து, கோவிலைச் சுற்றி பிரகாரமாய் வரச் செய்தது. பிரகாரமாய் முருகனை வலம் வந்தவள், ஆறுமுகனின் அருட்பார்வைக்குள் நுழைந்தபோது, துமிலன் அங்கேயேதான் இருந்தான்.