நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும், நிறத்தினை கொண்டும் வடிவங்களை கொண்டும் இனம் பிரித்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.கருப்பு மச்சம், சிகப்பு மச்சம், பச்சை மச்சம் என்பவை பொதுவாக காணப்படுவதாகும். இதில் சங்கு வடிவம், பிறை வடிவம், சக்கர வடிவம் என வடிவ மைப்பிலும் முடியுள்ள மச்சம் என அமைப்பிலும் பகுக்கப்பட்டுள்ளது.கண்களால் காணமுடியாதவண்ணம் மச்சமிருப்பின் யோகமாகும். அதில் முடி இருந்தால் அதிர்ஷ்டமே.